நட்சத்திரம் வானின் பொற்சித்திரம் என்று அன்று நான் எழுதியது இன்னும் என் நண்பனுக்கு நினைவிருக்கும் :)
சும்மா நாலு வார்த்தைகளை எதுக மோனையா போட்டால் கவிதை வந்துவிட போகுதுன்னு தான் முதல்ல ஆரம்பிச்சேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது ஒரு நாலு பேர்த்த impress பண்ண உபயோக படுத்திக்கலாமேன்னு .
ஆனா ஒரு பொண்ணோட பிறந்த நாளுக்கு எழுதின மொக்க கவிதைய அந்த பொண்ணு எத்தனை பிறந்த நாள் கொண்டாடினாலும் மறக்க மாட்டாள் ..
என் கல்லூரி வகுப்பிலேயே மிகவும் இளகிய , உதவும் எண்ணம் கொண்டவள் அவள் . என்னதான் அதிக பழக்கம் இல்லையென்றாலும் அவளுக்கு ஒரு வாழ்த்து அட்டை கொடுத்து அவள் பிறந்தநாளில் அசத்த வேண்டும் என்று முடிவு செய்தோம் , சும்மா எப்படி கொடுப்பது என்று நான் எழுதிய கவிதை .. கொஞ்சம் மொக்கையாதான் இருக்கும், இருந்தாலும் என் நண்பர்கள் இரசிப்பதற்காக ,
மழை தரும் தருவே..
தரு தரும் நிழலே ....
நிழலில் வாழும் உன் நண்பர்களின்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
