புதன், 1 ஏப்ரல், 2009

மழலையின் மடியினில்

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் -என்று அணுவைத் துழைதேழ் கடலை புகுத்தும் திருக்குறளை எழுதிய வள்ளுவர் சொல்வார், அது போல என்னதான் இரகுமான் ,ஆரிசு செயராசு இசை கேட்டாலும் மழலையின் புரியாத மொழியின் இன்பமே தனி.இன்றொரு மழலையினை ஓடும் பேருந்தின் ஓரமாய் பார்த்தேன்-பார்த்ததும் அதிர்ந்து கொண்டிருந்த பாட்டை கேட்க மறுத்தன என் காதுகள் ..
ஏன் தெரியுமா,
உன்னைப்போலவே எந்த எதிர்பார்ப்பும் இன்றி நான் வாழ்ந்திருக்க கூடாதா என்று எனக்கு கேட்க தோன்றியதால் ..
உலகில் மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று ..யாரோ சொன்னது நினைவுக்கு வரவே மீண்டும் மூழ்கினேன் मोला வுக்குள் .. (தில்லி 6 )....
சக ஊழியர்களோடும் ,நான் எப்போதும் பார்க்கும் அந்த மழலை முகப் பெண்ணோடும் சேர்ந்தேன் அலுவலகத்திற்கு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக